Skip to main content

அகமும் புறமும் 11

          2022   டிசம்பர்   16     வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை.

                     போர்க்களத்தின் பூ

மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி

போது விரி பல் மரனுள்ளும் சிறந்த

காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே

கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த

தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;

காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,

ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை

பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.

புறநானூறு: 272

பாடியவர்: மோசி சாத்தனார்

திணை: நொச்சி

துறை : செருவிடை வீழ்தல்

மலர் பூத்த மரத்திற்கான பாடல் இது. நொச்சி போருக்கான மலர். போரில் வென்றவர்களோ தோற்றவர்களோ சூடிய மலர் அல்ல. போருக்கு செல்லும் போது போர்வீரர்களால் சூடப்பட்ட மலர். எனில் அது எத்தனைக்கு ப்ரியமான மலராக இருந்திருக்கக் கூடும். 

அதனால்தான் மோசிக்கிரனார்

‘காதல் நன்மரம் நீ..’ என்கிறார்.

இன்று தெய்வங்களும் பெண்களும்  மலர்களை சூடிக்கொள்கிறார்கள். அன்று மலரானது ஆண்களுக்குமானதாக  இருந்திருக்கிறது. போருக்கு செல்லக்கூடிய போர்வீரர்கள் ஒரு மலரை சூடுவார்கள்  என்றால் மலர் என்பது அங்கு ஒரு அடையாளம். வென்றெழும் வேட்கையின் ,ஆற்றலின் மலர் நொச்சி எனக்கொள்ளலாம். 

இந்தப்பாடல் காட்டும் சித்திரத்தைப் பார்க்கலாம். கோட்டையை சுற்றிலும், வீடுகளை சுற்றிலும் காவல் மரமாக நொச்சி இருந்திருக்கிறது. வேலிமரம். கோட்டைஅரண்களும், வீட்டின் அரண்களும் நொச்சி மரங்களால் ஆனவை. அந்த மரங்களில் கோர்க்கப்பட்ட மணிச்சரம் போன்ற மலர்கொத்துகள் மலர்ந்துள்ளன. வளையல்கள் அணிந்த கரங்களை உடைய பெண்களின் ஆடையாகவும் நொச்சிமலர் கொத்துகளும், இலைக்கொத்துகளும் இருந்திருக்கின்றன.

‘தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி’ என்றால்  வளையல்களை அணிந்த பெண்களின் ஆடையாக இருக்கிறாய் என்று மோசிக்கீரனார் நொச்சியைப் பார்த்துக்கூறுகிறார். [ அல்குல் என்பது அரைஞாண் கயிறு கட்டக்கூடிய இடம்]

மரத்தின் பாகங்களில் இருந்து ஆடை தயாரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தழையாடையாக பயன்பட்டிருக்கலாம். வீட்டை சுற்றி இயல்பாக வேலி மரமாக வளர்க்கப்படக்கூடியது என்பதால் ஆடையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பெண்களின் அரணாகவும், வீட்டிற்கான அரணாகவும், நாட்டிற்குமான அரணாக இருப்பதால் போர் செய்ய புறப்படுபவர்களுக்கும் அரணாக அவர்கள் தலையில் இருக்கக்கூடிய பெருமை உனக்கே உரியது என்று கவிஞர் சொல்கிறார். நொச்சியின் கிளைகள் இல்லாத குச்சிகளை கொண்டு படல்கள் பின்னி வீட்டிற்கு சுற்று மதிலாக வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டுப்பட்டிகளுக்கான படல்கள் இப்படித்தான் அமைக்கப்படுகின்றன.

போர்க்களத்தில் ஒரு பூ அரணாகும் என்று நம்பும் வழக்கம் நமக்குள்ளது. மலர் எத்தனை மென்மையானது. போருக்கும் மலருக்கும் என்னத்தொடர்பு. நமக்கு மலர்களுடனான தொடர்பு ஆதியில் இருந்து இன்றுவரை அறுபடாத ஒன்று. நாம் காலத்தால் எத்தனை எத்தனை  விஷயங்களை கைவிட்ட பின்பும் நம் கைகளில் மலர்களுடனேயே வந்திருக்கிறோம். பல சமயங்களில் சொற்களின் பதிலியாக மலர்களே நமக்கு முன் நிற்கின்றன.  நம் அன்றாடத்தில், விழாக்களில்,மகிழ்ச்சியில், துக்கத்தில் உடனிருக்கின்றன. இறப்புவீட்டில் ஒரு மலரை வைப்பதைவிட நம்மால் வேறென்ன பெரிதாய் சொல்லிவிட முடிகிறது. அதே தொடர்பு தான் போர்வீரன் வாள் எடுக்கும் போது இணையாக ஒரு பூவையும் எடுக்கிறான். பாதுகாப்பிற்காக ஆணியும்  ஆடைகளைப்போலவே ஒரு மலரை தன் தலையில் அணிகிறான். மலர் என்பது இங்கு போர் அடையாளம் என்பதிலிருந்து செயலிற்கான ஒன்றாக மாறுவதை காண்கிறோம். மதிலை தாக்கி அழிப்பதை நொச்சித்திணை என்றே சங்கஇலக்கியம் சொல்கிறது. முப்பது அடிவரை எளிதாக வளரக்கூடிய இம்மரங்களை உயிர்மதில்களாக வளர்ந்திருப்பார்கள். மேலும் கோட்டைகளுக்கு வெளியே வளர்த்து உருவாக்கப்படும் காவல்காடுகள் நொச்சிமரங்களால் ஆனவை என்ற குறிப்பும் உள்ளது.

‘நொச்சி மரமானாலும் வச்சிப்பாத்து வெட்டு’ என்ற பழமொழி இன்று வரை உள்ளது. இந்த பழமொழி பற்றி எனக்கு பலவித யோசனைகள் உண்டு. ஒருநொச்சி மரம் எங்கள் வயலில் ஆற்றோரமாக வயல் மேட்டில் இருக்கிறது. நொச்சி எங்கும் அரணாகத்தான் நிற்கிறதோ என்று இப்போது தோன்றுகிறது. எந்த  உறவையும் சட்டென்று நினைத்ததும் வெட்டிவிடக்கூடாது அல்லது எவ்வளவு எளிய பொருள் என்றாலும் அதை அழிக்கும் முன்பு யோசித்து செய்ய வேண்டும் என்ற அன்றாடப்பொருளில் இந்தப்பழமொழியை பயன்படுத்துகிறோம். 

காவலரண்களை மாற்றி அமைப்பதற்காக இந்த மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்ததால் காவலாக உள்ள நொச்சி வேலி அடிக்கடி அழிக்கப்பட்டிருக்கலாம். எளிதில் வெட்டக்கூடிய, மறுபடி வேலி அமைக்கும் அளவுக்கு எளிதில் வளரக்கூடிய ஒரு மரம். போரில் காவலே முதலில் அழிக்கப்படும் என்பதும் மாறாத நெறி. போர்வீரர்கள் வாள்எடுத்ததும் யோசிக்காமல் மதிலை அழிக்கும் வேகத்துடன் இருப்பார்கள்.  அதிலிருந்து இப்பழமொழி உருவாகியிருக்கலாம். போர்களுக்காக உருவான பழமொழியாகவும் இருக்கலாம். படையெடுத்தல் என்பதே எண்ணி எண்ணி செய்யவேண்டியது தானே. சங்ககாலத்தில் தமிழ்நிலத்தில் எத்தனை எத்தனை போர்கள். அவற்றின் குறிப்புகளாக சங்கக்கவிதைகளே உள்ளன.

நொச்சியின் மலர்கள் நீலநிற கொத்துகளாக மலர்பவை. மிக அழகானவை. சங்கக்கவிதைகள் காதலை, போர்களை, வெற்றிகளை, தோல்விகளை, நடுகற்களை பாடுவதைப்போலவே இவை ஒவ்வொன்றுக்குமான பலவகையான பூக்களையும் சேர்த்தே சொல்கின்றன. அந்த வகையில் ‘காதல் நன் மரம்’ என்று ஒரு கவிஞன் போர்காலத்தில் நொச்சியைப்பாடி அம்மலரை காலத்திற்கும் மலர வைத்திருக்கிறான்.

கோர்த்த மணிச்சரம் போல

பூங்கொத்துகளை உடைய நொச்சியே,

மலரும் மரங்களில்

நீயே அன்பிற்குரிய மரம்.

அகன்ற நகரில்

கண்காணும் வரை நீயே பூத்திருக்கிறாய்.

வளைகரங்களை உடைய 

பெண்களின் ஆடையானாய்.

கோட்டையின் காவலரண் ஆனாய்,

ஊரை பகைவரிடத்தில் விட்டுக்கொடுக்காமல் காக்கும் போர்வீரனின் தலையிலிருக்கும் உரிமையும் உன்னுடையதே.

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...