Skip to main content

Posts

பாதரசத்துளி : சம்யுக்தா மாயா கவிதைகள்

  மறுதலிப்பு காட்டின் ஒற்றையடிப் பாதையில் வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில் செய்வதறியாது மருண்டு நிற்கும் கள்ளமற்ற மானைப் போல உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில் ஸ்தம்பித்து நிற்கிறேன் உண்மையில் எதிரே இருக்கையில் கூட உன் கண்கள் என்னை சந்திப்பதே இல்லை நீ என்னிடம் பேசும் சொற்கள் வேறு எவரையோ நோக்கியபடி தான் சொல்லப் படுகின்றன காற்றின் திசை மாறும் வேகத்தில் சிதறி விழும் ஒரு துளி மழைக்காக வாய் விரிக்கும் சாதகப் பட்சியென மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன் நீ கவனமின்றி தவற விடும் சிறு பார்வைக்காக எனினும் அந்த மாயக்கணம் தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி நகர்ந்தபடி இருக்கிறது மீன்களற்ற நதியின் மடியில் சிறு தீண்டல் வேண்டி நெடுங்காலமாய் பசும்பாசி அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்                                                   கவிஞர் சம்யுக்தா மாயா    சம்யுக்தாவின் கவிதைகளில் உள்ள அன்பிற்கான ஏக்கம் தரையில் விழுந்த பாதரச துளி போன்றது. எதிலும் ஒட்டாது, தரையி...

எழுதாப்பயணம் : லஷ்மி பாலகிருஷ்ணன்

                [2019 சொல்வனம் இணைய இதழில்  வெளியான கட்டுரை]                        நானென்பதும் நீயென்பதும்  அதுவென்பதும் நூல்:எழுதாப்பயணம் ஆசிரியர்:லஷ்மிபாலகிருஷ்ணன் வாசிப்பனுபவம்:கமலதேவி ஆற்றோரமாக இருந்த மரங்களை தழையுரத்துக்காகக் கழிக்கும் போது அடிமரத்திலிருந்து வளைந்து நெளிந்து கோணலாக வளர்ந்த தென்னங்கன்றை வெட்டிவிடலாம், நாளைக்கு விலைபோகாது, காய்ப்பு எப்படின்னு சொல்லமுடியாது என்று மரமேறி சொன்னார்.பின்நாட்களில் அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தாத்தாவிடம், “பொழுதுக்கும் உத்துஉத்து பாத்துக்கிட்டிருக்காம தட்டிவிடுங்க கெண்டியாரே..” என்று சொல்லுவார்கள். பத்துஆண்டுகளாக சரியாக மழையில்லாத பச்சைமலை அடிவாரத்தின் அந்தப் பகுதியில், தென்னைகள் காய்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன.வளைந்தமரம் தாக்குபிடித்து தன்னாலியன்ற சிறுசிறு காய்களை காய்த்து நிற்கிறது.இயற்கையின், உயிரின் இயல்பை நம்மால் ஒருபோதும் வகுத்துவிட முடியாது என்பதற்கான சாட்சிகள் நம் அருகில் இருந்து கொண்டேயிருக்கின்றன. எழுதாப்பயணம் என்ற இந்...

இலையுதிர் காலத்து மழை

[2023 ஜூலை 1 தமிழினி இணைய இதழில் வெளியான கதை] இலையுதிர் காலத்து மழை  இந்த இரவு என்றில்லை ஒவ்வொரு இரவுமே இப்படித்தான் இருக்கிறது. இரவை கழிக்க வேண்டும். பகலை கடக்க வேண்டும். இரவில் என்னவாகும் என்று இந்த நகரத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் பதட்டம். சாமானிய மக்களின்  தினப்படி வாழ்வில் அரசியல்  தீவிரமானால் அந்த நாட்டுமக்கள் நல்ல வாழ்க்கை  வாழவில்லை என்று அப்பா சொல்வார். அப்பா கொந்தளிப்புகளை விரும்பாத மனிதர். இளம் வயதில் அவர் மீது எனக்கு அத்தனை எரிச்சல் இருந்தது. என்ன மனிதர் இவர்? சப்பாத்திகளும் வெண்ணையும் முட்டைகளும் மேசையில் இருந்தால், பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணமும், அம்மாவுக்கு ஒரு முத்தமும் தரமுடிந்தால் இவர் இயேசுவுக்கு முன் ஆயிரம் முறை மண்டியிட்டு கண்ணீர் சிந்துவார் என்று அண்ணன்களிடம் ஒரு முறை சொல்லி சிரித்தேன். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த நாடே அதைத்தான்  நினைக்கிறது. தந்தைகளின் சொற்களை காலம் தன் நெஞ்சில் பொறித்துவைத்து பிள்ளைகளிடம் காட்டுமோ  என்னவோ!  “மானசீகமான ஒரு நிலநடுக்கம் நாட்டில் நிகழ்ந்துவிட்டது,”  என்று செர்கே இதே இடத்தில் சென்ற ஆண்டு ஒரு...

அந்த கிச்சிலி மரத்தடியில்

        [ஜனவரி 30, 2023 தமிழினி இணைய இதழில் வெளியான கதை] அந்த கிச்சிலி மரத்தடியில் யுவான் தன்சிவந்த மெல்லிய இடது கரத்தை நீண்ட மரத்திண்டின் மீது அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்த சிறுவீட்டின் வடக்கு புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக்கேட்டது. அந்த ஒலியை கேட்டபடி அவன் வலது கரத்தின் இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டை சீவி கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் அவன்  லயித்திருந்தான். அதன் பின்ணனியில் நீர் ஊற்றும் ஒலி. அவன் முகம் புன்னகைக்கொண்டது. அந்த மரவீட்டிற்கு வெளியே உறைபனி மண்ணை மறைக்கபடி இருக்க வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையை பார்த்தான். உடலை நிமிர்த்தினான். முதுகில் ஒரு புள்ளியில் இருந்த வலி படர்ந்தது. கைகளால் அந்த இடத்தை நீவியபடி சின்னஞ்சிறு கண்ணாடி சன்னலருகே சென்று நின்றான். கண்முன்னால் ஆல்பைன் மலைச்சிகரங்கள் எங்கும் பனி மூடியிருந்தது. கணேமுன்னே தூய வெள்ளை...

முதல் குயிலோசை

 எப்பொழுதும் கோடை முடியும் தருணத்தில் ஜூன் மாதத்துவக்கத்தில் குயிலின் முதல் குரல் கேட்கும். ஒரு வாரமாக தினமும் மதிய நேரத்தில் மழை துவங்கி பெய்வதும் நிற்பதுமாக இருக்கிறது. திடீரென்று நல்ல மழை. பின் தூரல். வெயில் இல்லாத புழுக்கம். இன்று காலையில் சமையலறையில் இருக்கும் போது கூகூகூ என்று இந்த ஆண்டின் முதல் குயில் குரல். ஒரே ஒரு கூவல் தான். பின்பு கேட்கவில்லை. வீட்டின் மேற்கு புறம் பின்வாசலின் பக்கவாட்டில் பெரிய காலிஇடம் உண்டு. முருங்கை ,தென்னை, பெரிய நுணா மரம், செடிவகைகள் வளர்ந்த இடம். அங்கு குயில்களை பார்க்கமுடியும்.  குயில் குரலை கேட்தும் முதலில் 'ஐ' என்று ஒரு குதூகலம். அது ஒரு வெயிலின் குரல் என்று என் மனதில் பதிந்துவிட்டது. ஒரு ஆண்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம்படி பலமுறை தொடங்கும். சிலருக்கு அவர்களின் பிறந்தநாள். சிலருக்கு வேலை கிடைத்தநாள். பலருக்கு திருமண நாள் என்று பலவிதங்களில் மீண்டும் மீண்டும் நம்மை புதிதாய் துவக்கிக்கொள்ள முயல்கிறோம்.  எப்போதும் ஓடக்கூடிய வண்டி என்றாலும் காற்று குறைவது போல...டயர் மாற்றுவது போல...ரயில் தண்டவாளங்களை பழுது பார்ப்பது போல ஒன்று. அவர...

அம்பையின் படைப்புலகம் 4

 நீலி இணைய இதழில் பிப்ரவரி 2024 ல் வெளியான கட்டுரை [அம்பையின் துப்பறியும் கதைகளை முன்வைத்து...] தடயங்கள் துப்பறியும் கதைகளை வாசிக்கும் போது நமக்கு உலகம் முழுவதுமே தடயங்களால் ஆனது தானோ என்று தோன்றும். தொல்படிமங்கள், எச்சங்களில் இருந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள் ,கோவில்கள் என்று அனைத்தும் ஒருபார்வையில் தடயங்களும் கூட. தனியளவில் நாமே கூட ஒரு தடயம். நம் மரபணு எவ்வளவு பெரிய உயிரியல் தடயம். தடயம் என்பது அடையாளம் காணுதல் என்றும் பொருள்படுகிறது.  இலக்கியத்தை உளவியல் தடயங்களாக உயிரியல் துறை எடுத்துக்கொள்ளும். விட்டுச்செல்லுதல் ஒரு முனையில் கலையாகவும், அடையாளமாகவும், நிலைநிறுத்திக் கொள்ளுதலாகவும் இருக்கும் போது இன்னொரு முனையில் அதுவே குற்றப் பின்னணியில் தடயங்களாக ஆகிறது. நான் முதன்முதலில் வாசித்த க்ரைம் நாவலின் வரி இன் னும் நினைவில் இருக்கிறது. பம்பாய்க்கு பத்தாவது மைலில் என்று அந்தக்கதை தொடங்கியது. என்னளவில் சிறுவயதில்  க்ரைம்புத்தகங்கள் ஒரு வரண்ட தன்மையை கொண்டதாகத் தோன்றும். வீட்டில் ஒருகட்டத்தில் குவிந்த க்ரைமிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன். கொரானா ஊரடங்கின் போது மறுபடியும் நிறைய து...

அம்பையின் படைப்புலகம் 3

 [ஆகஸ்ட் 2023 நீலி இதழில் வெளியான கட்டுரை] காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை முன் வைத்து.                  நீரெல்லாம் கங்கை  அவள் எந்தச் சேறும்,சகதியும்,பாசியும் சேர்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள். தொடக்கம்,முடிவு இல்லாதவள்                                      _அம்பை [பிரசுரிக்கப்படாத கைப்பரதி கதையில் இருந்து] அம்பையின் காட்டில் ஒரு மான் என்ற சிறுகதைத் தொகுப்பு பரவலாக வலுவான பெண் கதாப்பாத்திரங்களை கொண்டுள்ளது. இந்தத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் அடுத்தடுத்த வாசிப்புகளிலும் வாசிப்புசுவை குறையாதவை. இதில் உள்ள சில கதைகளை வெவ்வேறு வயதுகளில் தொடர்ந்து வாசிக்கிறேன். பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர், அடவி, பிரசுரிக்கப்படாத கைப்பிரதி போன்ற கதைகள் முக்கியமானவை. இந்தத்தொகுப்பில் அம்பையின் மொழி வசீகரமான ஒரு இறகைப்போல இயல்பாக பறக்கிறது. அம்பையின் ஆழ்உள்ளத்தை கட்டமைக்கும் புராண இதிகாச கதைகள் மற்றும் கதைமாந்தர்கள், மரபிசை, தமிழ் இலக்கிய பாடல்கள்,...