Skip to main content

Posts

சிலுவைப்பாதை

 [2022 மே மாத சொல்வனம் இதழில் வெளியான கதை] சிலுவைப்பாதை பள்ளி இறுதித்தேர்வுகள் தொடங்குவதற்கு இன்னும் நான்குவாரங்கள் இருந்தன. வெள்ளிக்கிழமை சாயுங்காலம் அது. இனி தேர்வுகள் முடிந்து விடுதியை விட்டு வெளியேறும் நாள் அன்றுதான் வீட்டிற்கு செல்லமுடியும் என்பதால் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் கிளம்பினார்கள். பதிவேட்டில் கையெழுத்திட நீண்ட வரிசை நின்றது. பத்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் காத்து நின்றார்கள். “நிஜமாலுமே நீ ஊருக்கு போகலியா ப்ரியா, “என்றபடி ப்ரியா பக்கத்தில் சாந்தி அமர்ந்தாள். விடுதியின் முன்பு இருந்த  பெரிய வேப்பமரத்தின் அடியில் பழைய சிமெண்ட் மேடையில் இருவரும் அமர்ந்திருந்தனர். மேடையெங்கும் காய்ந்த வேப்பஞ்சருகுகள் மிகமெல்லிய காற்றுக்கும் நகர்ந்து நகர்ந்து இடம் மாற்றிக்கொண்டேயிருந்தன. சற்றுநேரத்தில் அனைவரும் வெளியேறிய மைதானம் அமைதியாக இருந்தது. எதிரே இரண்டுமாடி பள்ளிக்கட்டிடம் இளம்சிவப்பு நிறத்தில் சலனமின்றி உயர்ந்து நின்றது.  ப்ரியா சாந்தியின் பக்கம் திரும்பி அமர்ந்து பேசத்தொடங்கினாள்.  “உனக்கு கஸ்ட்டமா இருக்குன்னு சொன்னியே...

மொழி கைவிடாத இருள்

  [ ஜூன் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்] ஊஞ்சலின் இருபக்கங்கள்  போல கவிதையால்  ஒரு விசும்பலில்  இருட்டிற்கும் வெளிச்சத்திற்குமாய் தாவ முடிகிறது. ஆனால் ஊஞ்சல்  கோர்க்கப்பட்ட அச்சு அங்கேயே இருக்கிறது. எழுத்தாளர் சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகளை வாசிக்கும் போது ஊஞ்சலின் அச்சு மெல்லிய ஔிக்கும், இருட்டுக்குள்ளும் தெளிந்தும் தெளியாமலும் இருப்பதை உணரமுடிகிறது. இவரது எழுத்துகளை வாசிக்கும் போது மொழி கைவிடாத இருளால் அருளப்பட்டவர் என்று தோன்றியது.                  கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்  அடர்ந்த இருளில் ஒரு கைவிளக்கு போல மொழி இருக்கிறது. தத்தளிக்கும் மனம் ஒன்று எழுத்தாக தன்னை முன்வத்துவிட்டு சென்றிருக்கிறது. எங்கோ எப்போதோ எப்படியோ ஏற்பட்ட காயம் ஆறாத மனம்  இவரின் கவிதைகளில்  தளதளக்கிறது. அவை உரைநடைக்கு நெருக்கத்திலும் கவிதைக்கு முன்பும் நிற்கின்றன என்று சொல்லலாம். அது ஒரு தனி வெளி. சூனியமல்லாத சூனியம். பிரக்ஞை இல்லாத பிரக்ஞை. ஆழ்மனம் வெளியே வந்து நிற்பதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பவர்களை பற்றுகிறது. கட...

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

விடமுண்ட கண்டம்

கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா எழுதிய வம்ச விருட்சம் [வம்சவிருட்சா. தமிழில் மொழிஆக்கம் கே. நல்ல தம்பி]என்ற நாவலையும், மலையாள எழுத்தாளர் ஹெப்சிபா ஜெசுதாசன் எழுதிய புத்தம் வீடு நாவலையும் சமீபத்தில் வாசித்தேன். வம்சவிருட்சம் நாவல் சீனிவாச பண்டிதர் தன் மகன் நஞ்சுண்ட பண்டிதரை கபிலை ஆற்று வெள்ளத்தில் இழப்பதிலிருந்து தொடங்குகிறது. நஞ்சுசுண்ட பண்டிதரின் மனைவி காத்தியாயினி கைக்குழந்தையுடன்  கணவனை இழந்து நிற்கிறாள். தன் பொறுப்புகளை மகனின் தோளுக்கு மாற்றிவிட நினைத்திருக்கும் சீனிவாச பண்டிதர் மறுபடியும் குடும்ப பொறுப்புகளை ஏற்க நேர்கிறது.  காத்தியாயினியின் அப்பாவும் மாமியாரும் கணவனை இழந்த காத்தியாயினியிக்கு முடி மழித்து மடியுடுத்தி விதவைக்கான நோன்புகளை ஏற்க வைக்க நினைக்கிறார்கள். ஆனால் சீனிவாச பண்டிதர் 'நோன்புகளை ஒருவர் மனம் உவந்து ஏற்க வேண்டும்...நாம் கட்டயப்படுத்தக்கூடாது' என்று மறுத்துவிடுகிறார்.  காத்தியாயனி கல்லூரிக்கு செல்ல விரும்பும் போது சீனிவாசபண்டிதர் அவளுக்கு ஆதரவு தந்து தன் மனைவி பாகிரதி அம்மாவை சம்மதிக்க வைக்கிறார். தினமும் ரயிலில் பத்து மைல் தொலைவி்ல் உள்ள மைசூர் கல்ல...

அலைபேசி இல்லாத நாட்கள்

 கிட்டதட்ட இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி கீழே விழுந்து செயலிழந்து விட்டது. அதை சரி செய்வது விரயம். அதை ஆறு ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இந்த அலைபேசியில் தான் நான்கு புத்தகங்கள் எழுதி, தொகுத்து, பிழைபார்த்து வெளியாகியிருக்கின்றன.  நினைவகம் அதிகம் உள்ள அலைபேசி வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை எனக்கு.  Word document ல் நிறைய கோப்புகள் காணாமல் போய்விட்டன. முக்கியமான புகைப்படங்கள் அழிந்துவிட்டன. பட்ஜெட்டிற்குள் அலைபேசி,கிராமத்திற்கு கொரியர் சிக்கல், அதனால் திருப்பிவிடுதல் விடுதல்,என்னுடைய சின்ன கவனக்குறைவு,கொரியர் பாயின் சிறு ஈகோ என்று தாமதமாகி ஒருவழியாக நேற்று வந்து சேர்ந்தது. இந்த இருபத்தைந்து நாட்களில் கடைசி பத்து நாட்கள் அம்மாவின் அலைபேசியை பயன்படுத்தினேன். திருவிழா வாரத்தில் காலையில் கொஞ்ச நேரம் வைத்திருந்தப்பின் அலைபேசி அம்மாவிடம் சென்றுவிடும். தாயும் பிள்ளையும் என்றாலும் அலைபேசியும் வாட்ஸ்ஆப்பும் வேறுவேறு ... நான் அலைபேசியில் எழுதி பழகி வழக்கமாகிவிட்டதால் காகிதமும் பேனாவும் மனமும் இணைந்து வரவில்லை. தினமும்  எதையாவது ...

கவிதைக்கு காலமில்லை

 [ 2025 ஏப்ரல் கவிதை இதழில் வெளியான கட்டுரை] நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது அல்லது இசைப் பாடலாக கேட்கும் போது சங்கக்கவிதைகள் மூளையில் வருவதை  கவிதானுபவம் என்று சொல்லலாம்.                                   கவிஞர் இசை உன்னை காணவே…… சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவிதோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது,முல்லை மலர்ந்துவிட்டது,காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது,அந்தியும் வந்ததுவே என்று எத்தனை பாடல்கள். இந்தக்கவிதைகள் ‘இன்னும் வரவில்லை’ என்பதை எத்தனை ஆடிகளில் பிரதிபலித்துக்காட்டுகிறது. கலேடாஸ்கோப்பை திருப்புவதைப்போல தலைவிகளின் மனம் இந்த உணர்வை விதவிதமாக உணர்கிறது. பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் வாரார் குறுந்தொகை :118 உணவிற்காகவும் காரியங்களுக்காகவும் பலர் வந்து செல்லும் இல்லம் அது. இரவில் வாயிலை அடைக்கும் முன் ‘யாராவது வருபவர் உள்ளீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இரவு உணவு வே...

கனியானப்பின்னும் நுனியில் பூ

 மார்ச் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்... ஔியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாவற்றையும் ஔி இருளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு கவிஞரை,ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது. அங்கு வாசகர் உணர்வது எதுவென்றாலும் அது அசாதாரணமானது. எழுத்தாளர் வண்ணதாசனின் கனியானப் பின் நுனியில் பூ என்ற என்ற வரி [சிறுகதையின் தலைப்பு] அவருடைய எழுத்தின் வழி நாம் உணரும் உச்சத்தை கண் முன்னே காட்டும் காட்சி படிமம் எனலாம். கனிந்தப்பின் பூத்தல். கனிந்த பின் உதிர்தலோ முளைத்தலோ அல்ல அது. அழுகி இல்லாமலாகி வேறொன்றாகி முளைப்பது அல்ல. கனிந்த பின்னும் பூத்தல். கவிஞர் கல்யாண்ஜியின் அண்மையை தொகுப்பான ‘காற்றை கேட்கிறவன்’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்படும் கவிஞர் கல்யாண்ஜி அசாதாரணமானவர். அவர் தான் தொடங்கிய இடத்திற்கே இன்னொரு வழியில் வந்து நின்று...