காட்டின் நிச்சயமற்ற தன்மைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத மனித இனம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் ஒரு போர்சூழலில் தலைகீழாக மாறுகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும், சிறு பிரதேசங்களும், ஊர்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட வெளியில் வந்து சேர்பவர்களும், பூர்வீகமான அங்கே வாழ்பவர்களும் சேர்ந்தே வாழ்கிறோம். மனித இனம் அது உருவான காலத்தில் இருந்தே நடந்து நடந்து குடியேறி பல்கிப்பெருகியது. காட்டில் உள்ள வேட்டை சூழலில் இருந்து தப்பித்து இத்தனை தொலைவு மானுடம் வந்து சேர்ந்திருக்கிறது. மனிதனின் ஆதிஉணர்வுகளில் அச்சம் மனித இனத்தை காட்டில் நிலைகொள்ள விடாது துரத்தியது. சமூகமாகி அந்த அச்சத்தை வென்ற பின், தனக்கான அனைத்தையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அவன் அகமும்புறமும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முயன்று கொண்டே இருக்கிறான். இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும்
இசையாகி நின்றாய் புரவி செப்டம்பர் இதழில் வெளியாகிய தமிழின் மூத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல். என் கேள்விகளையும், குரலையும் பொறுமையாக கையாண்ட யுவன்சார்க்கும் ,வாசகசாலை நண்பர்களுக்கும் என் அன்பு. எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்கள் தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. ஆறுநாவல்கள்,சிறுகதை தொகுப்புகள்,கவிதை தொகுதிகள் என மொழிவெளிப்பாடுகளின் பலவகைமைகளில் இயங்குபவர். இசையில் தோய்ந்து இசையுடனேயே இருக்கும் இயல்புடையவர். ஹிந்துஸ்தானி இசை என்ற தளத்தில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவல் கானல்நதி. பொதுவாகவே இசை குறித்த நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல். இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க வேண்டிய இவரின் மற்றொரு நாவல் நினைவுதிர்காலம். இது கானல்நதி நாவலை மையப்படுத்திய நேர்காணல். 1. நாவலிற்கான பின்னுரையில் இசை என்ற புலத்தைப் பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாவல் வெளிவந்த பின்னரான இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றனவா இல்லை கேள்விகள் அதிகமாகியிருப்பதாக நினைக்கிறீர்களா? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதி
2018 டிசம்பர் 5. நான் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பான சக்யை நூலை தொகுத்து முடித்தநாள். சக்யை வெறும் புத்தகம் மட்டுமல்ல. நான் கொண்ட விடாத பிடிப்பின் முதல் கனி . இந்த புத்தகத்தில் சில பல போதாமைகள் இருக்கலாம். நுண்ணுணர்வு நிரம்பிய சிறுகதைகளை கொண்ட தொகுப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை. அதற்கான வாசகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது வரை உண்டு. நேற்று காலை வானத்தை பார்க்கும் போது போதவிழ் வான் பூ என்ற சங்கப்பாடல் வரி மனதில் ஓடியது. எப்பொழுதோ எழுதப்பட்ட ஒரு வரி. குறிப்பிட்ட செய்யுளில் அதற்குள்ள உறவு வேறு. தனி வரியாக நம் மனதிற்குள் பதிவது வேறு. சிலநாட்களாக தொடர்ந்த மழையால் அவ்வளவாக சூரியஉதிப்பு கண்களுக்கு புலப்படவில்லை. தினமும் காலைமழையால் வெளிச்சமாக மட்டுமே சூரியனின் இருப்பை உணர முடிந்தது. மந்தமான இருள் கலந்த வெளிச்சம். நேற்று வானம் தெளிந்து சூரியன் உதிப்பதற்கு முன்பான வெளிச்சத்திலிருந்து, சூரியன் உதிக்கும் வரை இந்த வரியே மனதில் இருந்தது. வானம் இதழ் விரிக்கிறது. காலைவானம் ஒரு அமைதியான மொட்டு விரிவதைப்போல ஔிவிரித்து ஔி எழுந்தது. மேற்கே உள்ள கொல்லிமலை மரகத பச்சைக்கு மாறத்தொடங்கியது. அங்கங்
Comments
Post a Comment