அகாலத்தில்
எங்கோ பற்றிய எரி...
காலபைரவனின் இதழ்கடை துளி புன்னகை,
தலைமுறைகளின்
சிதைகளில் மிஞ்சிய ஒரு கனல்துண்டம்.
காட்டெரிக்கு மூலம் இல்லை.
ஒரு சருகு சிறு பொறி
உண்டு செரிக்கிறது காட்டை.
பசுமரக் கிளைகளில் செந்தளிர்கள்
அன்று பூத்த பூக்கள்..
கனல் பூத்தக் காட்டில்
காலம் வேகும் மணம்.
அவன் நடனத்தின் பதங்களில்
மண்ணுக்குள்
விதைகளின் கண்கள் திறக்கின்றன.
Comments
Post a Comment