Skip to main content

Posts

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

                      இசையாகி நின்றாய் புரவி செப்டம்பர் இதழில் வெளியாகிய தமிழின் மூத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல். என் கேள்விகளையும், குரலையும் பொறுமையாக கையாண்ட யுவன்சார்க்கும் ,வாசகசாலை நண்பர்களுக்கும் என் அன்பு. எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்கள் தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. ஆறுநாவல்கள்,சிறுகதை தொகுப்புகள்,கவிதை தொகுதிகள் என மொழிவெளிப்பாடுகளின் பலவகைமைகளில் இயங்குபவர். இசையில் தோய்ந்து இசையுடனேயே இருக்கும் இயல்புடையவர். ஹிந்துஸ்தானி இசை என்ற தளத்தில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவல் கானல்நதி. பொதுவாகவே இசை குறித்த நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல். இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க வேண்டிய இவரின் மற்றொரு நாவல் நினைவுதிர்காலம். இது கானல்நதி நாவலை மையப்படுத்திய நேர்காணல். 1. நாவலிற்கான பின்னுரையில் இசை என்ற புலத்தைப் பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாவல் வெளிவந்த பின்னரான இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றனவா இல்லை கேள்விகள் அதிகமாகியிரு...

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவிற்கு அஞ்சலி

         கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார். "மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்"                 _பிரான்ஸிஸ் கிருபா        பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன.  "கணங்கள்தோறும்  என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது….ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக்கூடாது" பிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை சாதாரணமாக பார்த்தால் காதல்கவிதையாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு கவிதை வாசிப்பவருக்கு எப்படியாகவும் இருக்கலாம் என்பதே கவிதை என்னும் வெளிப்பாட்டை மிக வசீகரமானதாகவும், அந்தரங்கமானதாகவும் ஆக்குகிறது. இந்தக்கவிதையை இறையை நோக்கி திருப்பும் போது அது எத்தனை விரிவு கொள்கிறது! "நடைபோடும் வழிகள் கடைகள் வரை நினைக்கின்றன பிள்ளைகள் பற்றிக்கொள்ள ஒருவிரல் போதுமென்று ஒற்றை விரலுக்குப் பின்னே மு...

பொன்சிறகு

      சொல்வனம் இணையஇதழில் வெளியான கதை .                              பொன்சிறகு இதென்ன சாவுஉறக்கம் என்று ராணி மங்கம்மாள் விழித்து எழுந்தபோது இருள் விலகாமலிருந்தது. அவிழ்ந்து கிடந்த நீண்ட நரைகலந்த கூந்தலை கொண்டையாக இடும்பொழுது,' இன்னுமா மதுரா கமலத்தை எழுப்ப சூரியன் ஓடிவரவில்லை' என்று நினைத்து புன்னகைத்தார். பொன்அகலின் திரி தீயும் கருகல் மணம் பரவுவதை நுகர்ந்து பொழுதுணர்ந்து மனம் திடுக்கிட்டு மெத்தையிலிருந்து இறங்கினார்.  சாளரம் இருக்கும் திசைக்கு பழக்கவாசத்தில் நடக்கும் போது கண்களை கசக்கிக்கொண்டார். அறுபதை நெருங்கும் வயதில் கண்களில் ஔி குறையாமல் என்ன செய்யும் என்று நினைத்தவராக சாளரக்கதவுகளை தள்ளினார். அது திறக்கவில்லை. மனம் இரண்டாகப்பிரிந்து ராஜபாட்டையில் விரையும் குதிரைகளானது. பலம் கொண்ட மட்டும் கதவுகளை சாளரங்களை மீண்டும் தள்ளினார். வாளேந்தி சந்திரகிரியை மீட்க நினைத்திருந்த கனவுகள் கலைந்ததும், கரங்களுக்கு அரண்மனை சாளரக்கதவையும் திறக்கமுடியவில்லை என்ற எண்ணத்துடன் கைகளை உதறிக்கொண்டார். துரத்தி செல...

சிறுகதை : காயம்

     புரவி ஆகஸ்ட் இதழில் வெளியான என்னுடைய  கதை.                                                                                                                              காயம்                                                                 தெருவிளக்கு வெளிச்சம் படரும் தகரதாழ்வாரத்து கயிற்றுக்கட்டிலில் செல்வம் அமர்ந்திருந்தார். மனதிலிருப்பதை பேசமுடியாத எரிச்சல் நெற்றி சுருக்கங்களாக வளைந்தது. அவர் பார்வை திண்ணையைத் தாண்டி  வீட்டினுள் சென்றது. சௌமியாவும் சத்யாவும் எதுவுமே நடக்கவில்லை என்பதைப...

எழுத்தாளர் ம.நவீன் நேர்காணல்

மலேசிய எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் பேய்ச்சி நாவலை மையப்படுத்தி புரவி ஆகஸ்ட் இதழிற்காக செய்த நேர்காணல். எழுத்தாளர் நவீன் மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு. எழுத்தாளரின் நூல்கள்: 1.சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்), 2.வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல் 3.மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு) 4.போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு) 5.பேய்ச்சி (2019) நாவல் 6.மகாராணியின் செக் மெட் (2019) கவிதை 7.உச்சை (2020) சிறுகதை தொகுப்பு 8.கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு) 9.விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு) 10. வகுப்பறையின் கடைசி நாற்காலி  – 2015 (கட்டுரைத் தொகுப்பு) 11. லகின் நாக்கு - 2017 (உலக இலக்கிய அறிமுகம்) 12.மீ ண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு) 13.நா ரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு) 14.மனசிலாயோ - 2020 (பயண நூல்) ம 15.ம லேசிய நாவல்கள் (2020) தொகுதி   நேர்க்காணல்: எழுத்தாளர் ம.நவீன் நேர்க்கண்டவர்:எழுத்தாளர் கமலதேவி கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் க...