Skip to main content

Posts

அகமும் புறமும் : 2

                 2022 ஆகஸ்ட் 1,வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.             மொட்டவிழும் கணம்                                  ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, மந்தி நல் அவை மருள்வன நோக்க, கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய், புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி தோழி! அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? அகநானூறு:82     பாடியவர்:கபிலர்   திணை:குறிஞ்சி அகநானூற்றில் களிற்று யா...

குருதியுறவு :கதை

    2019 ஜூன் வாசகசாலை இணய இதழில் வெளியான கதை.                                                                   குருதியுறவு                                                                                                      1                                     கருக்கிலேயே மூர்த்திக்கு  விழிப்புத்தட்டி விட்டது.படுக்கையிலிருந்து எழுந்து நின்ற போது இடதுகால் தள்ளாடியது.படுக்கையிலேயே அமர்ந்து காலை பிடித்துவிட்டபடி இருளுக்குள் பார்த்துக்கொண்டிருந்தார்.ருக்மணி நன்றாக உறங...

முதல்பயணி

                             முதல் பயணி மழைமுடித்த சாலை யாருமற்று கருமையாய் நீண்டு செல்கிறது... முதல் பயணியாய் அப்போதுதான் சுடர்ந்த தெருவிளக்கு வெளிச்சம்

அகமும் புறமும் _ 1

  வாசகசாலையின் இணைய  இதழில் சங்க கவிதைகள் சார்ந்து புதிய தொடர் ஒன்றை எழுத உள்ளேன். இதுதான் என னுடைய முதல் 'தொடர் எழுதும் ' முயற்சி. இதற்காக என்னுடைய வாழ்வனுபவத்திற்கும், நான் கேள்விப்பட்ட மனிதர்களின் வாழ்வனுபவத்திற்கும் ஒத்துப்போகும் பாடல்களை தேடுவது தான் சவாலானது. நிறைய கவித்துவமான பாடல்களை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கான அனுபவம் எனக்கு கிடைக்கும்போது ஒருவேளை மீண்டும் எழுதலாம். இந்த சிறிய வாழ்வின் எல்லைக்குள் எத்தனை சங்கப்பாடல்களுக்கான அனுபவங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஏற்கனவே உணர்ந்த சில தருணங்கள் சட்டென தெளிந்து வருகின்றன. பாடல்களை வாசிக்கும் போது சில வாழ்க்கைகளை புதிதாக இணைத்து கொள்ள முடியலாம். நானே என்னுள் இருப்பவற்றை தேடி கண்டடையும் அனுபவமாகவும், உணர்ந்தவைகளை பகிரும் அனுபவமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் நன்கு அறிந்த சில சங்கப்பாடல்கள், என் வாழ்வின் வெளிச்சத்தில் எனக்கு என்னவாக இருக்கின்றன என்பதாகவும் இருக்கலாம். செங்காந்தலின் இதழ் எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே  இலக்கியங்கள் தன் ஆன்மாவாக கொண்டிர...

மைத்ரி : நாவல் வாசிப்பனுபவம்

 புரவி ஜூலை இதழில் வெளியான கட்டுரை.              பேரெழிலின் சங்கமங்கள் எழுத்தாளனுடைய, கவிஞனுடைய, இசைக்கலைஞனுடைய, ஓவியனுடைய, சிற்பியுடைய, யோகியுடைய பார்வையிலிருக்கும் அதே பாவத்தோடு ஒன்றிப் போகச்செய்யும் போது படைப்பாளனும் நுகர்வோனும் ஒரு பிறப்புகணத்தின் இரு பகுதிகளாகின்றனர்.                                  _ நித்ய சைதன்ய  யதி                    நாவலாசிரியர் அஜிதன் உத்ரகண்டில் உள்ள ருத்ரபிரயாகையில் நாவல் தொடங்குகிறது. பிரயாகை என்றால் சங்கமம். மைத்ரி என்றால் ஒருமை. மிச்சமின்றி சங்கமித்தல். மனிதனும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். இயற்கையும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். மனிதரும் மனிதரும் சங்கமிக்கும் உணர்வு நிலைகள். மனமும் மனமும் சங்கமிக்கும் இடங்கள். ஆணும் பெண்ணும் சங்கமிக்கும் இடங்கள். இறுதியில் தானே தன்னை அறிந்து தன்னுடன் சங்கமிக்கும் ஒரு அறிதல் நிலையில் நாவல் முடிகிறது. மேலே கூறியவை எழுத்தாளர் அஜிதனின் ‘ம...

எழுத்தாளர் திருச்செந்தாழை

 எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு இலக்கியத்திற்கான புதியதலைமுறை தமிழன் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். கண்விழித்ததும் பார்த்த முதல் செய்தி. உடனே அவரின் கதைகள் மனதில் சுழன்றன. அவற்றைப்பற்றி நான்கு வரிகளாவது எழுதிவிட வேண்டும் தோன்றியது. நேற்று முன்தினம் தமிழினி இணையஇதழில் திருச்செந்தாழையின் வீழ்ச்சி சிறுகதை வாசித்தேன். அந்தக்கதை மனதிலேயே சுழன்று கொண்டிருந்ததால் சமைக்கும்போது அம்மாவிடன் கதையாக கூறினேன். ஒரு வாசகியாக செந்தாழையின் கதைகளில் என்னைத் தொட்டு அசைப்பவை அவரின் கதைமாந்தருக்குள் இருக்கும் 'வெகுளித்தன்மை' . வியாபாரத்திற்கு சரியான எதிர்நிலை என்றால் அது வெகுளித்தனம் தானே. வியாபரம் என்பது எத்தனை பெரிய ஆடுகளம். வியாபாரத்தை ஒருவர் கையிலெடுக்கும் போது முதலில் எழும் எண்ணம் வீழ்ச்சி பற்றியதாகத்தான் இயல்பிலேயே நமக்கு எழுகிறது. வியாபாரத்தை கதைக்களனாக் கொண்டு எழுதும் போது வியாபாரத்தில் வெல்லும் ஒருவரை விட தோற்கும் ஒரு கதாப்பாத்திரம் நம்மை பதட்டமடைய வைக்கிறது. பொதுவாக வியாபாரத்தில் வெல்லும் தலைமுறைக்கு அடுத்தத்தலைமுறை வியாபார சூட்சுமங்களை மன...

உயிர்த்தெழல்: சிறுகதை

 ஜூன் 16, 2022 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை. உயிர்த்தெழல் எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்  வரை காலமுண்டு. காலத்தின் நினைவாக எஞ்சுவது எதுவாக இருக்கும். என் அன்பரின் சொற்களே  இனிவரும் காலத்தின் நினைவாகும். காலத்தை முன் பின் என பகுக்கும். இதோ அவர் எருசலேமின் மதிலிற்கு வெளியே சிலுவையில் நிற்கிறார். எருசலேம் பாறைகளின் நிலம். இந்த பாறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர். அவர் எப்போதும் மதில்களை  அன்பின் பொருட்டு பொடித்துக் கொண்டே இருந்தார். என் மனதின் மதில்களை கணத்தில் உதிர்த்தவர். இங்கே எத்தனை எத்தனை மதில்கள் நீண்டு கிடக்கின்றன. காற்றென மதில்களைக் கடக்கும் அவரின் சொற்களின் பொருட்டு இப்போது அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார். சொற்களை சிலுவையில் அறைய முடியும் என்று நம்பி அறைந்திருக்கிறார்கள். எருசலேமின் நீண்ட கல்மதிலில் புழுதிக்காற்று மோதித் திரும்புகிறது.  மற...