நதிப்பயணம்:ஜானகிராமம்
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த 'ஜானகிராமம்' என்ற நூலிற்காக நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . தி.ஜா நண்பர் சிட்டியுடன் இணைந்து எழுதிய பயணநூலான 'நடந்தாய் வாழி காவேரி ' என்ற நூல் குறித்த கட்டுரை. ஜானகிராமம் நூலை தொகுத்தவர் பேராசிரியர் கல்யாணராமன். கொரானா பெருந்தொற்று கால ஊரங்கு நாட்களில் வெளியிடப்பட்டதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அவரது இல்லத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் நூற்றி இரண்டு கட்டுரைகள் உள்ளன. தி.ஜா வின் நூற்றாண்டு மலருக்காக கட்டுரை எழுதியது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது. நதிப்பயணம் கதைசொல்லுதல் வழி உலகம் கண்களுக்கு தெரியாத வலையால் வரலாற்றுடனும், வரலாற்றுக்கு முந்தைய புராணகாலத்துடனும், அதன்மனிதருடனும், அந்த வாழ்வுடனும், நிகழ்காலத்தில் இணைந்திருக்கிறோம்.கதைகள் காலத்தை கோர்த்துக்கட்டும் பூஞ்சரடு.நேற்றும் இன்றும் நாளைகளுக்குமான சரடு. அவ்வகையில் பயணஇலக்கியம் ஒரு கதைசொல்...