2017 அக்டோபர் மாத சொல்வனம் இதழில் வெளியான கதை. புலன் விசாரணை இன்று புரட்டாசியின் மழைஅதிகாலை.மெல்லிய குளிர் மாறி விடியவிடிய புழுக்கம் ஏறிவருகிறது.மென்குளிர் காற்று.வாசலில் மண்ணோடு குழைந்த நீரின் மணம் உணர்ந்து புன்னகைத்தேன்.கோலம் வரையும்வரை வேறுமணத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன்.வெந்நீரா?தண் நீரா? என்று மனம் சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தது.நீராவி வெண்புகையாக எழுந்து மேற்கே கொல்லிமலைக் குன்றுகளை பார்வையிலிருந்து மறைத்தது.கிழக்கே பச்சைமலைக்குன்றுகளுக்கு மேல ஔியெழ இன்னும் நேரமிருக்கிறது. இருளில் அமைதியிலிருக்கிறது ஊர்.பக்கத்து வீடுகளில் மெதுவான அரவங்கள் கேட்டாலும் யாரும் அமைதியை கலைக்கத்துணியாமல் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.கொல்லிமலையின் ஒருகுன்றடியில் பறந்துவிழுந்த பசும் ஆலிழை போன்ற பசும்மணமும், உள்ளங்கையளவுமான ஊர்.தெருவில் நடந்து செல்லும் பசுக்களின் குளம்போசையும்,செருமலும்,மணியோசையும், தெருமுக்கில் அவை செல்லும் பாதையை ஒலியால் மனதில் வரைந்தன. ஏதோ ஒருபசு அப்போதுதான் இட்டசாணியிலிருந்து எழும்நீராவி தெருவிளக்கு வெளிச்சத்தில் கண்கள...
🌿🦋என்னால் பூக்காமலிருக்க முடியவில்லை _ கவிஞர் அய்யப்ப பணிக்கர் 🌺🍀