Skip to main content

Posts

புலன்விசாரணை:சிறுகதை

         2017 அக்டோபர் மாத சொல்வனம் இதழில் வெளியான கதை. புலன் விசாரணை       இன்று புரட்டாசியின் மழைஅதிகாலை.மெல்லிய குளிர் மாறி விடியவிடிய புழுக்கம் ஏறிவருகிறது.மென்குளிர் காற்று.வாசலில் மண்ணோடு குழைந்த நீரின் மணம் உணர்ந்து புன்னகைத்தேன்.கோலம் வரையும்வரை வேறுமணத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன்.வெந்நீரா?தண் நீரா? என்று மனம் சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தது.நீராவி வெண்புகையாக எழுந்து மேற்கே கொல்லிமலைக் குன்றுகளை பார்வையிலிருந்து மறைத்தது.கிழக்கே பச்சைமலைக்குன்றுகளுக்கு மேல ஔியெழ இன்னும் நேரமிருக்கிறது. இருளில் அமைதியிலிருக்கிறது ஊர்.பக்கத்து வீடுகளில் மெதுவான அரவங்கள் கேட்டாலும் யாரும் அமைதியை கலைக்கத்துணியாமல் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.கொல்லிமலையின் ஒருகுன்றடியில் பறந்துவிழுந்த பசும் ஆலிழை போன்ற பசும்மணமும், உள்ளங்கையளவுமான ஊர்.தெருவில் நடந்து செல்லும் பசுக்களின் குளம்போசையும்,செருமலும்,மணியோசையும், தெருமுக்கில் அவை செல்லும் பாதையை ஒலியால் மனதில் வரைந்தன. ஏதோ ஒருபசு அப்போதுதான் இட்டசாணியிலிருந்து எழும்நீராவி தெருவிளக்கு வெளிச்சத்தில் கண்கள...

கங்காபுரம் : நேர்காணல்

 மார்ச் புரவி இதழில் வெளியான எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் நேர்காணல். எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு அன்பும், நன்றியும். ஒரு அரசனின் அகமும் புறமும் கவிஞரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் புனைவிற்கான பொற்கிழி விருது பெற்றுள்ள அவருக்கு நம் மனமார்ந்த  வாழ்த்துகள். கங்காபுரம் இவரின் முதல்நாவல். இது ஒரு வரலாற்று நாவல். ராஜேந்திர சோழன் என்னும் பேரரசரின் அகப்போராட்டங்களின் வழி நகரும் இந்த நாவல் சோழப்பேரரசின் மகத்தான காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. தன் அகப்போராட்டங்களில் இருந்து எழுந்து ஆகப்பெரிய செயல்களை நோக்கி நகர்ந்த  பேரரசரின் கதை இது. ஐம்பது வயதிற்கு மேல் கங்கை , இமயம் வரை திக்விஜயம் செய்தல்,புதிய தலைநகரை உருவாக்குதல்,சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை வெட்டுல்,சிவனிற்கு ஆலயம் எடுப்பித்தல் என்று அவரின் செயல் நோக்கிய நகர்வு வியப்பானது. இது  பலதுறைகள் சார்ந்த நுண்தகவல்களை கொண்ட நாவலான காங்காபுரத்தை  மையப்படுத்திய, உரையாடல் வடிவிலான  நேர்காணல். 1.கவிதையிலிருந்து நாவல் போன்ற வி...

மூச்சே நறுமணமாக

2022 மார்ச்மாத சொல்வனம் இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை. சிவகாமி நேசன் எனும் இனிமை பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார்.  அவை ‘மூச்சே  நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் அல்ல. குரல்,ஒலி,கவித்துவம்,மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை என்று பின்னட்டைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  நான் இந்த நூலை ஒரு இலக்கிய பிரதியாக அல்லது கவிதையாகவே வாசித்தேன். என்னால் இந்த எல்லைக்குள் தான்  அக்கமகாதேவியின் எழுத்துகளில் உள்நுழைய முடிந்தது. கவிதை வாசகி என்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தநூலைப்பற்றி எழுத முடியும் என்று நினைக்கிறேன்.  நூலில் பெருந்தேவி குறிப்பதைப்போல சென்னமல்லிகார்ச்சுனா என்று அக்கமகாதேவி சிவன...

எல்லைகளை விரித்தல்

 சொல்வனம் இணையஇதழில் வெளியாகும் எனது கதைகளுக்கு சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவம் தருகிறார். இது மாதிரியான முயற்சிகள் வாசிக்கமுடியாதவர்கள்,முதியவர்கள்  என்று பலதரப்பட்ட வாசகர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய உதவி. இது அவர்கள் மற்றொருவர் உதவியின்றி தன்னிச்சையாக, தன் நேரத்திற்கு கதைகளை கேட்பதற்கான அழகான வழி. அதற்காக சொல்வனத்திற்கும் ,சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் என் அன்பு. மத்தளம் கொட்ட சிறுகதைக்கான சுட்டி https://youtu.be/4U0ecR_wT6w

ஊற்றுகள்: சிறுதை

      2017 ஜூலை சொல்வனம்  இணைய இதழில் வெளியான    சிறுகதை                ஊற்றுகள்                   அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு ஃபோர்வண்டியின் ஒலி எழுந்தது. அது முடக்குவேம்பைக் கடந்து நின்றது. பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன. அப்போதுதான் அசந்துபடுத்த நாய்கள் சுழன்றெழுந்து குறைத்து, பின் நிதானம்கொண்டு சுற்றிவந்தன. மாசிமாதகிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிற கூரைவீடுகளும்,முற்றம் வைத்த மஞ்சள்ஓட்டுவீடுகளும்,தகரம்வேய்ந்த மண்வீடுகளும்,மில்லினியத்திற்குப் பின் கட்டிய பச்சை,ரோஸ்,ஊதா நிற திண்ணைகள் இல்லாத சிறுமாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது. இரும்புக்குழாய்களை இறக்கிபோட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர். வெயிலேறத் தொடங்கியது.  வயல்வேலையில்லாததால் ஆட்டுமாட்டிற்கு தண்ணீர்காட்டி ,தீனிபிடுங்கிப் போட்டுவிட்டு வந்தவர்கள் அந்தஇடத்திற்கு அருகிலிருந்த வேம்படியில், வீ...

பொன்சிறகு சிறுகதையின் ஒலிவடிவம்

சொல்வனம் இணையஇதழின் யூடியூப் சேனலில் வாசிக்கப்பட்ட கதை. வாசித்தவர் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள். அவருக்கு என் நன்றிகள். அதற்கான சுட்டி: https://youtu.be/1xT_sUWifm8

அமுதம் சிறுகதையின் ஒலிவடிவம்

 சொல்வனம் இதழில் வெளியான அமுதம் என்ற கதையின் குரல் வடிவம். நன்றி: சொல்வனம் மற்றும் கதைக்கு குரல் கொடுத்த சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.  https://youtu.be/haIBNtdI5MI