Skip to main content

Posts

அணையா தீபம்

 ஊரில் வழக்கம் போல கார்த்திகை மாத பயிர்ப்பொங்கல்.  வரிசையாக சிறுதெய்வங்களுக்கும், வயல்தெய்வங்களுக்கும் வழிபாடுகளும் பலிகொடுத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. நாளை கோட்டைப்பிள்ளையாருக்கும்,ஊமைப்பிடாரிக்கும் பொங்கல் என்று நேற்று ராஜேந்திரன் அண்ணா தண்டோரோ போட்டுவிட்டு சென்றார். சின்னய்யாவின் பள்ளித்தோழர். சின்னய்யாவின் இறப்பால் ஒரு ஆண்டுக்கு கோவில்கள் வழிபாடுகள் வீட்டில் விழாக்கள் வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கள் தலைமுறையில் சின்னய்யா வீட்டில் முதல் இழப்பு. அய்யாவின் திருமணத்திற்கு முன்பு தாத்தா இறந்தார்.  காரியத்தன்று புரோகிதர் அண்ணா 'இந்த வருஷம் உங்களுக்கு அமாவாசை விரதம் தவிர எதுமில்லை..மனசை காத்துண்டிருக்கனும்' என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது சாதாரணமாக இருந்தது.  [ஆனால் இந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை 'வீட்ல எல்லாவளும் எப்படி இருக்கேள்...'என்றபடி வந்துவிட்டார். இவரும் ,இவர் அப்பா கண்ணன் அய்யாவும், பாட்டனார் சப்தரிஷிதாத்தாவும் மிகவும் உற்சாகமானவர்கள். வரும் போதே உற்சாகத்தை அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு வருபவர்கள்] ஆனால் இந்த நான்கு மாதங்களில் 'மனசை க...

விண்மீன்

 ‘ அவன் தலைகீழாய்ப் புரட்டி வைக்கும் மணற் கடிகாரத்தில் முடிவுறாக் குழந்தைமையில் என் முதற்கணமெனச் சொட்டும் ஒரு துகள்.’                             ___________ எதையேனும் மறக்க முனைந்தே கழிகிறது என் பொழுது ஒரு நாள் ஒரு ஆள் ஒரு ஊர். மறதியின் முதல்கல் இடறி கலையும் தேன்கூடென வரிசையில் வந்து தாக்கும் நாட்கள் ஊர்கள் மற்றும் மனிதர்கள்                                                    கவிஞர் எம்.யுவன் வாழ்வுடன் காலம் கொண்டுள்ள ஒட்டுதலில்லா உறவின் முன் நின்று விதிர்க்கும் மனதை யுவன் கவிதைகளில் உணரமுடிகிறது. அவர் காலத்தையும், வெளியையும் தீராத தாபத்துடன் அணுகும் மனம் கொண்டவராக கவிதைகளில் தெரிகிறார். இதை தர்க்கம் என்று கவிஞர் சொல்லக்கூடும். கவிதைவாசகர் அதை நம்ப வேண்டியதில்லை. தர்க்கம் மேலும் மோசமாக சென்று முட்டி நிற்பது தீவிரமான உணர்வு நிலைகளையே. [மோசமாக என்பது நேர்மறையான பொருளில்]. துறவியாக போவது ...

பசியற்ற வேட்டை

காட்டின் நிச்சயமற்ற தன்மைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத மனித இனம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் ஒரு போர்சூழலில் தலைகீழாக மாறுகிறது.  உலகின் அனைத்து நாடுகளிலும், சிறு பிரதேசங்களும், ஊர்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட வெளியில் வந்து சேர்பவர்களும், பூர்வீகமான அங்கே வாழ்பவர்களும் சேர்ந்தே வாழ்கிறோம். மனித இனம் அது உருவான காலத்தில் இருந்தே நடந்து நடந்து குடியேறி பல்கிப்பெருகியது. காட்டில் உள்ள வேட்டை சூழலில் இருந்து  தப்பித்து  இத்தனை தொலைவு மானுடம் வந்து சேர்ந்திருக்கிறது.  மனிதனின் ஆதிஉணர்வுகளில் அச்சம் மனித இனத்தை காட்டில் நிலைகொள்ள விடாது துரத்தியது. சமூகமாகி அந்த அச்சத்தை வென்ற பின், தனக்கான அனைத்தையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அவன் அகமும்புறமும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முயன்று கொண்டே இருக்கிறான். இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே.  ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின...

இலக்கியத்திற்கான கடவுச்சீட்டு

 நேற்று யூட்யூபில் எழுத்தாளர் சுந்தரராமசாமியின் ஆவணப்படம் பார்த்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் கி.ரா, சு.ரா, ஜெயகாந்தன் ஆவணப்படங்களை ஒரே நாளில் சேர்த்து பார்த்திருக்கிறேன்.  ஜெயகாந்தனின் சிரிப்பும் அந்த தலைப்பாகைக்கட்டும் மனதில் இருந்து அகலவே அகலாது. யோசித்தால் மூவரின் குரலும் சிரிப்பும் பேச்சும் இன்று வரை அவர்களை நினைக்கும் போதெல்லாம் மனதை சுற்றிக்கொண்டே இருக்கிறது. அன்றிலிருந்து வரிசையாக யூடியூபில் கிடைக்கும் எழுத்தாளர்களின் ஆவணப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கும் போது அவ்வப்போது இடைஇடையே மனஎழுச்சியினால் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். அம்மாவுக்கு ஜெயகாந்தனை தெரியும். அவரைப்பிடிக்கும். அவரின் ஒன்றிரண்டு கதைகளை இளம்வயதில் வாசித்திருக்கிறார்.  சு.ராவிற்கு வார்த்து எடுத்ததைப் போன்ற குரல். ஆவணப்படத்தில் நேர்காணல் செய்யும் இளம் பெண்ணுடன் சு.ரா பேசும் இடம் அழகானது. அதே போல படம் துவங்கும் போது ஆற்றும் உரை.  சு.ராவை பள்ளி வயதில் முதலில் வாசித்தேன். 'உழவுமாடும் கோயில் காளையும்' சிறுகதை பாடப்பகுதியாக இருந்தது. அதற்கு முன்பே 'ஜன்னல்' கதை வாசி...

கடல் சூழ்ந்த கவிஞன்

 [செப்டம்பர் 2023 கவிதைகள் இதழில் வெளியான கட்டுரை] நான் வண்ணத்துப்பூச்சியாகிவிட்டேன் கடந்தகாலம் இரண்டு சிறகுகளாக வளர்ந்து என் தோளில் அசைகிறது நான் எழுதுகிறேன் வானம் சிறுகுழந்தையாகி என்னெதிரே துள்ளித்துள்ளி இறங்குகிறது நல்ல வேளை நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாகியிருக்கிறேன் நன்றி கடந்த காலமே இனி என் உண்ணாவிரதம் ஒரு புன்னகையால் முடியும்       _ஜெ. பிரான்சிஸ் கிருபா                 கவிஞர் ஃப்ரான்சிஸ் கிருபா ஆழ்மனதுடன் கொண்ட உறவால் தான் நாம் கவிதையை நெருக்கமாக உணர்கிறோம். காலகாலமாக  மானசீகமான ஒரு உணர்வுக்கடத்தல் கவிதை வழியே தொடர்ந்து வருகிறது. கவிதை மனிதஉணர்வுகளின் மொழிவடிவம் என்பதாலேயே கவிதை மற்ற இலக்கியவடிவங்களை விட மனதிற்கு நெருக்கமாகிறது. நம்முடைய ஆழ்மனம் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள் நம் மூளையில் அச்சம்,குரோதம்,காமம்,வன்மம் மற்றும் அன்பு போன்ற உணர்வுகளால் உருவானது. அவற்றை சுற்றியுள்ள இயற்கையுடன் இணைத்து மனித மனம் மொழி என்னும் படிமங்களின் தொகுப்பாகிறது. அந்த தொகுப்பில் உள்ள கூட்டு மனதின் ஆழ்மனப்படிமங்கள் தொடர்ந்து கவிதையி...

இற்றைத்திங்கள் அந்நிலவில் 3

              செப்டம்பர் 2023 இதழில் வெளியான கட்டுரை சங்கப்பெண்கவிகள்:3         மொழியென்னும் ஆடி ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார்,காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற்றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று  சொல்லப்படுகிறது.  திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் ஊஞ்சலில் வைக்கப்பட்டப்பின், பெண்கள் கூடி கைக்கோர்த்து வட்டமாக ஆடும் ஆட்டம் துணங்கை கூத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம்.   ஆட்டன்அத்தியை காவிரி வெள்ளம் அடித்துச் செல்கிறது. அவரைத் தேடிச் செல்லும் மனைவி ஆதிமந்தியார் பாடும் பாடல் இது. ஆடிமாத காவிரியில் வெள்ளம் கரை புரள அதை வரவேற்கும் விழாக்கள் கரை நெடுக நடக்கின்றன. ……………… என்கைக் கோடீ ரிலங்குவளை  நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகளமகனே [குறுந்தொகை :31 ஆதிமந்தியார்: மருதத்திணை] அன...

இற்றைத்திங்கள் அந்நிலவில் 4

         [அக்டோபர் 2023   சொல்வனம் இணைய இதழில்  வெளியான கட்டுரை]                                      காட்டாற்று வெள்ளம்               ஒக்கூர் மாசாத்தியார் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் பிறந்தவர். இவர் மூதின் முல்லைத்துறையில் பாடிய புறநானூற்றுப் பாடல் இன்று வரை சங்ககால மகளீரின் வீரத்திற்கான பாடலாக  உள்ளது. இவர் சங்க இலக்கியத்தில் எட்டுப்பாடல்கள்  பாடியுள்ளார்.  இயற்பெயர் மாசாத்தியார். [ஒக்கூரில் (சிவகங்கை மாவட்டம்) நிறுவப்பட்டுள்ள மாசாத்தியார் நினைவுத்தூண்] சங்ககாலத்தில் தொடர்ந்து போர் நிகழ்ந்ததை சங்கப்பாடல்களின் வழியே அறிகிறோம். முல்லைநிலத்தின் தலைவி ஒருத்தி தன் தந்தையை,கணவனை முந்தின நாட்களின் போரில் இழந்திருக்கிறாள். இன்றும் போர்ப்பறையின் ஒலி கேட்கிறது. மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறான். ‘ இன்றும் செறுப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப் பாறு மயிர்க் குடு...