Skip to main content

Posts

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

விருட்சத்தின் விதை

 ஒரு விதை  எத்தனை எளியது இந்நிலத்தில்..  செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில்..  காற்றில் பறந்து நிலத்தில் கிடந்து நீரில் மிதந்து எத்தனை புரளல்கள் அதன் வழியில்..  நிலத்தில் நின்று நீரில் நனையும்  ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்..  ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 

அல்லிக்குளம்

  பதின் வயதில் இந்த அல்லிக்குளத்தில் சாய்ந்து கொண்டு முதன்முதலாக தென்றல் பற்றி சொந்தமாக இருபது வரிகள் எழுதினேன். தென்றல், கடல், மலை என்று தலைப்புகள் கொடுத்து இருபது வரி கவிதை எழுதுவது தான் வீட்டுப் பாடம்.  விடுதியில் இருந்ததால் பள்ளி முடிந்தப்பின் மைதானத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம். இந்த குளத்தின் வலது ஓரம் என்னுடைய இடம்.  நேற்று தங்கை நிவேதா பொதுத்தேர்வு கணிதத்தாள்களை திருத்தும் பணிக்காக முசிறி அமலா பள்ளிக்கு சென்றாள். எனக்காக பள்ளியை புகைப்படம் எடுத்து வந்தாள்.   'பையனோ பெண்ணோ தெரியல  நூறு மார்க் போட்டேன் கமலா.. ஒரு சின்ன தப்பு இல்லை.. ஆறு பேர் மறுபடி மறுபடி திருத்தம் பாத்தாங்க.. என்று பரவசமாக சொன்னாள்.  கணிதப்பிரிவு வேண்டாம்  என்று இங்கு தான் நான் உறுதியாக சொன்னேன். நான் விரும்பிய சிறப்பு தமிழ் பிரிவு வேண்டாம் என்று அய்யா உறுதியாக இருந்தார்.   அறிவியல் பிரிவில் படித்துக் கொண்டு தமிழில் எதையாவது சொந்தமாக எழுதி பழகியதும் இங்குதான்.  பத்தாம் வகுப்பு வரை வீட்டில் கல்கியின் கதைகள், கல்கி மாத இதழ்,இந்தியா டுடே, ராமகிர...

தளிர்

 கோடையில் ஒரே மரங்களை தொடர்ந்து பார்ப்பது பரவசமாக அனுபவம்.  பெரும்பாலும அரசமரங்கள், வேம்பு, நுணாமரங்ளை தொடர்ந்து பார்ப்பேன். இலையுதிர்ப்பு முடிந்து நுணா மரத்தில் பூக்கும் நட்சத்திரங்கள் போன்ற வெள்ளை மலர்களும்,அடர்ந்து தளிர்க்கும் வேம்பின் இலைகளும் மலர்களும், அரசின் இளம்பச்சை தளிர்களையும் பார்ப்பது பரவசமானது.  அரச மரம் இலையுதிர்ப்பதை பார்ப்பதுவுமே மனதை மலைக்க வைக்கும். முழுவதுமாக முற்றிலுமாக உதிர்ந்து குச்சி குச்சியாக நிற்கும். பின் ஒரு நாள் காலையில் மரம் முழுவதுமே இளம்பச்சை தெரியும். பச்சைகளில் எத்தனை நிறம். நுணாவின் அடர் கரும்பச்சை, வேம்பின் அடர் பச்சை, அரசு தளிர்க்கும் இளம்பச்சை. அரசு தளிர்க்கும் பச்சையை பிறந்த குழந்தைக்கு ஒப்பிடலாம். மென்பச்சை.  இங்கு கோடை என்பது வெண்மை. கோடையின் முல்லைமலர்களும், நுணாப்பூக்களும், வேப்பம் பூக்களும் முதலில் பூக்கின்றன. வெண்மை அனைத்து நிறங்களும் சமன்வயப்பட்டது தனித்த நிறமல்ல. எல்லா நிறங்களும் வெளிப்படுவது.  மிச்சமில்லாது உதிர்ந்து சட்டென்று முழுக்க தழைப்பது அரசமரம். நாமுமே சில நேரங்களில் சிலவற்றை முற்றிலுமாக உதிர்த்து தழைக்க வேண...

கங்கா எங்கே போகிறாள்

 இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் பார்த்தேன். சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஆவணப்படத்தை எதேச்சையாக சென்ற வாரம் ஒரு நாள் சாயுங்காலம் பார்த்தேன். அன்றாட இக்கட்டுகளிலிருந்து அது தந்த மலர்ச்சியால் அடுத்தடுத்து எழுத்தாளர்கள் அசோகமித்திரன், நீல பத்மநாபன், யூ. ஆர். அனந்தமூர்த்தி ஆவணப்படங்களை தொடர்ந்து இன்று ஜெயகாந்தனின் படம்.  படம் முடிந்ததும்  'கங்கை எங்கே போகிறாள்' நாவலின் இறுதி காட்சி மனதில் வந்து கண்கலங்க வைத்தது. அது தந்த தொந்தரவிற்கு காரணம் உண்டு. சமீபத்தில் இரு பெண்களின் வாழ்க்கை மாற்றத்தை கண்முன்னே கண்ட தொந்தரவு அது.  என் தங்கை நிவேதாவும் நானும் கங்கை எங்கே போகிறாள் வாசித்து முடித்து கண்கலங்கியது நினைவில் வருகிறது. இருபதுகளின் தொடக்க வயதில் வாசித்தோம்.  பிரபுவை பிரிந்தப்பின் கங்காவில் ஏற்படும் மாற்றம் எங்களை அப்போது மிகவும் பாதித்தது. இன்றும் அந்த மாற்றம் தொந்தரவு தருகிறது. அப்படி என்றால் அந்த நாவலில் கலை சரியான விதத்தில் செயல்பட்டுள்ளது என்று சொல்லலாம்.  கற்பு ,சமூகம், சரி தவறு ,ஆண் மனோபாவம் இவற்றை...

அதே பாடலாசிரியர்

 விஷ்ணுபுரம் விழாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது 'கல்லூரி முதலாமாண்டில் நூலகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து புத்தகங்கள் இருந்த முழு அடுக்கையும் வாசித்தேன் ' என்றேன். அந்த பதிலை சொல்லும் போதே அந்த இலக்கிய அவையில் அந்த பகிர்தல் என்னை கீழிறக்கும் என்று தெரியும். ஆனாலும் உண்மை அது தான்.  ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து கல்லூரி சென்ற நான் கல்லூரியின் முதல் நாள் நூலகத்தை தேடி கண்டுபிடித்து சென்றேன். இன்றும் மனதில் உள்ள பரவசமான சாயங்காலம் அது. தமிழ் புத்தக அடுக்கில் வரிசையாக வைரமுத்து புத்தகங்கள் தான் இருந்தன. அப்போது கல்லூரியில் தமிழ் துறை இல்லை. கல்லூரி தொடங்கி  ஐந்தாண்டுகள் இருக்கலாம்.  நான் புத்தக அடுக்கின் முன் சென்று நின்ற போது நம் இலக்கிய முன்னோடிகளின் புத்தகங்கள் இல்லை. முதுகலை படிக்கும் போது தான் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன.   ஏற்கனவே வலுவான இலக்கிய பின்புலம் உள்ளவர்கள் நல்ஊழ் கொண்டவர்கள். வீட்டில் சிறார்நூல்களிலிருந்து கல்கி வரை வாசிப்பு அறிமுகமிருந்த நான் பாரதியார் கவிதைகள் நூலை மட்டும் பெட்டியில் எடுத்துக்கொண்டு வ...

மகிழ்ந்திரு

  https://youtu.be/blH2dOlKzpY?si=2l0dqQvPv1VlrStE எழுத்தாளர் ஜெயமோகனின் முழுமை அறிவு யூட்யூப் சேனலில் வரும் காணொளி இது.  பொதுவாக நம் சமூகத்தில் மகிழ்ச்சியாக உற்சாகமாக மனநிறைவுடன் வாழ முயற்சிப்பவர்களை அல்லது இயல்பாகவே அப்படி உணர்பவர்களை கவலையில்லாதவர்கள்,பொறுப்பற்றவர்கள்,சுயநலவாதி என்று சொல்வதுண்டு. இந்த காணொளியில் ஜெ சொல்லும் உற்சாகத்தை தினமும் ஈட்டிக்கொள்ள முயன்றவர் என்னுடைய தந்தை. அவர் எத்தனை பொறுப்பாக இருந்தும் அவருடைய உற்சாகத்தை காணும் உறவினர்கள் கவலையில்லாத மனுஷர் என்பார்கள். அவர் வாழ்வின் ஆற்றமுடியாத காயங்கள் பல உண்டு. திருமணமாகி சில மாதங்களில் அக்கா தங்கை இருவருமே தற்கொலை செய்துகொண்டது முதல் பல.  உண்மையில் அவரை கவலை இல்லாதவர் சொல்லும் இவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இல்லையா...எப்போதும் 'சீரியஸாக' இருக்கிறார்களா? என்று வியப்பாக இருக்கும். அனைவருமே தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரிந்த வகையில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் மனநிறைவில்லை என்று ஒரு கட்டத்தில் என்பது புரிந்தது .  மற்றவர்களின் உற்சாகத்தை கவலையின்மை என்று சொல்வது ஒரு வகை வன்மம். ஜெ சொல்...