பொருள்மயக்கம்
மலர்முகை தீண்டும் தென்றல்
கருமுகில் தீண்டும் காற்று
மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி
கைகால்முளைத்த கருசிசு தீண்டும் முதல்உந்தல்
கருவறை தெய்வத்தை தீண்டும் சிறுமலரின்
மென் தொடுகை…
அது அப்படியே
அப்பொருளிலேயே இருக்கட்டும்…
பதாகை இதழில் வெளியான கவிதை
Comments
Post a Comment