Skip to main content

Posts

அதே பாடலாசிரியர்

 விஷ்ணுபுரம் விழாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது 'கல்லூரி முதலாமாண்டில் நூலகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து புத்தகங்கள் இருந்த முழு அடுக்கையும் வாசித்தேன் ' என்றேன். அந்த பதிலை சொல்லும் போதே அந்த இலக்கிய அவையில் அந்த பகிர்தல் என்னை கீழிறக்கும் என்று தெரியும். ஆனாலும் உண்மை அது தான்.  ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து கல்லூரி சென்ற நான் கல்லூரியின் முதல் நாள் நூலகத்தை தேடி கண்டுபிடித்து சென்றேன். இன்றும் மனதில் உள்ள பரவசமான சாயங்காலம் அது. தமிழ் புத்தக அடுக்கில் வரிசையாக வைரமுத்து புத்தகங்கள் தான் இருந்தன. அப்போது கல்லூரியில் தமிழ் துறை இல்லை. கல்லூரி தொடங்கி  ஐந்தாண்டுகள் இருக்கலாம்.  நான் புத்தக அடுக்கின் முன் சென்று நின்ற போது நம் இலக்கிய முன்னோடிகளின் புத்தகங்கள் இல்லை. முதுகலை படிக்கும் போது தான் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன.   ஏற்கனவே வலுவான இலக்கிய பின்புலம் உள்ளவர்கள் நல்ஊழ் கொண்டவர்கள். வீட்டில் சிறார்நூல்களிலிருந்து கல்கி வரை வாசிப்பு அறிமுகமிருந்த நான் பாரதியார் கவிதைகள் நூலை மட்டும் பெட்டியில் எடுத்துக்கொண்டு வ...

மகிழ்ந்திரு

  https://youtu.be/blH2dOlKzpY?si=2l0dqQvPv1VlrStE எழுத்தாளர் ஜெயமோகனின் முழுமை அறிவு யூட்யூப் சேனலில் வரும் காணொளி இது.  பொதுவாக நம் சமூகத்தில் மகிழ்ச்சியாக உற்சாகமாக மனநிறைவுடன் வாழ முயற்சிப்பவர்களை அல்லது இயல்பாகவே அப்படி உணர்பவர்களை கவலையில்லாதவர்கள்,பொறுப்பற்றவர்கள்,சுயநலவாதி என்று சொல்வதுண்டு. இந்த காணொளியில் ஜெ சொல்லும் உற்சாகத்தை தினமும் ஈட்டிக்கொள்ள முயன்றவர் என்னுடைய தந்தை. அவர் எத்தனை பொறுப்பாக இருந்தும் அவருடைய உற்சாகத்தை காணும் உறவினர்கள் கவலையில்லாத மனுஷர் என்பார்கள். அவர் வாழ்வின் ஆற்றமுடியாத காயங்கள் பல உண்டு. திருமணமாகி சில மாதங்களில் அக்கா தங்கை இருவருமே தற்கொலை செய்துகொண்டது முதல் பல.  உண்மையில் அவரை கவலை இல்லாதவர் சொல்லும் இவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இல்லையா...எப்போதும் 'சீரியஸாக' இருக்கிறார்களா? என்று வியப்பாக இருக்கும். அனைவருமே தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரிந்த வகையில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் மனநிறைவில்லை என்று ஒரு கட்டத்தில் என்பது புரிந்தது .  மற்றவர்களின் உற்சாகத்தை கவலையின்மை என்று சொல்வது ஒரு வகை வன்மம். ஜெ சொல்...

தூக்கணாங்குருவி

  சரவணப்பொய்கையின் மூன்றாவது படிக்கட்டில் சுப்பு அமர்ந்திருந்தான். பொய்கை தழும்பிக்கொண்டிருந்தது. மழைகால காவிரி பொங்கி எழுந்து கிணறு குளம் குட்டை ஏரி என்று அனைத்தையும் நிரப்பி வழிந்தது. ஊரே காவிரி ததும்பும் காலம். பொய்கையின் வடிகாலை முழுவதுமாக திறந்து விட்டிருந்தார்கள். தண்ணீர் வருவதும்  தொடர்ந்து வெளியேறுவதுமாக பொய்கையின் கலங்கல் தெளிந்து கொண்டிருந்தது. நடேசனை எதிர்பார்த்து சுப்பு காத்திருந்தான். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர இவ்வளவு நேரமா? முதல் முறை சந்தித்ததிலிருந்தே  சுவாமிமலை தரிசனம் பண்ணனும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்தி காற்றும், வரும் தண்ணீரும், வெளியேறும் தண்ணீரும் சேர்ந்து கொள்ள பொய்கை தன்னைத்தானே சுழற்றிக்கொண்டு அலையடிக்கத்தொடங்கியது. நடேசனின் நாவலில் வரும் முசிறி காவிரியும் ,கரைவேலி கிராமங்களும் மனதில் வந்து போயின. ஆலங்கட்டி மழைவிழ சிறுவர்கள் ஆலங்கட்டிகளை பிடிக்க மழைக்குள் ஓடுவது அழகான தொடக்கம். வானத்திலிருந்து ஆலங்கட்டி கையில் விழுந்து  பார்த்துகொண்டிருக்கும் போதே அது கைசூட்டில் கரைவதை போன்ற விவசாய வாழ்க்கையை அந்த நாவல் மூலம் வாசிப்பவருக்கு ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

அழிகாட்டு சித்திரங்கள் [எழுத்தாளர் பெருமாள் முருகன் 60 கருத்தரங்க கட்டுரை]

எழுத்தாளர் பெருமாள் முருகன் [சென்னை மாநில கல்லூரியில் எழுத்தாளர் பெருமாள் முருகன் 60 அகவை நிறைவு என்ற கருத்தரங்கத்தில் அவர் படைப்புலகம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு 'நனவிலியின் நிலம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்காக நான் எழுதிய கட்டுரை]   அழிகாட்டு சித்திரங்கள் இலக்கியம் எழுதப்படுவதன் அடிப்படைகளாக உள்ள விஷயங்கள் என்ன என்ற கேள்விக்கு பதிலாக ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதிலிருந்து மனித மனதின் அறிந்து கொள்ள முடியாத ஒரு விழைவு என்பது வரை பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. கண்முன்னே ஓடும் ஆற்றில் நொடியில் கரையும் மண்கட்டி போல கரையும் காலம் மனிதருக்குள் ஏற்படுத்தும் பொருளின்மையை எதிர்கொள்ள மனிதஇனம் கலை ஓவியம் எழுத்தை உண்டாக்கிக்கொண்டது என்பதும் ஒரு அடிப்படை. காலத்தில் திளைக்க இசை. இசையின் மூலம் எந்த காலத்திலும் திளைக்கமுடியும். எழுத்தும் கலைகளும் காலத்தை பிடித்து வைத்து ஆடி திரும்பிக்காட்டும் முயற்சி என்று சொல்லலாம். காலமென்றான பிரபஞ்சத்தின் முன் மனித பிரக்ஞையின் ஆகப்பெரிய எத்தனம் கலைகளும் இலக்கியமும்.  எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஏறுவெயில்,நிழல் முற்றம்,கூளமாதாரி ஆகிய ம...

தும்பி அறியும் பெருங்காடு

 நான் செய்த நேர்காணல்களை 'தும்பி அறியும் பெருங்காடு  '   என்னும் நூலாக வாசகசாலை பதிப்பகம் வெளியிடுகிறது. வாசகசாலை நண்பர்களுக்கு அன்பு. நூலிற்கு நான் எழுதிய என்னுரை. எழுதியவர்களுடன் ஒரு உரையாடல் நண்பர்களுக்கு… இந்த நூலில் உள்ள நேர்காணல்களில் முதல் மூன்று நேர்காணல்கள் கொரானா உலகத்தொற்றின் இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. நேர்காணல்கள் புரவி அச்சிதழ், வாசகசாலை இணைய இதழ் மற்றும் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. இந்த நூலில் நேர்காணல்கள் வெளியான காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்கள். இவை இரண்டாயிரமாவது ஆண்டிற்கு பின்னர் எழுதப்பட்ட படைப்புகள். 2006ல் வெளியான கானல் நதியும், 2010ல் வெளியான துயிலும் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த நாவல்கள். நீலகண்டம், பேய்ச்சி, கங்காபுரம் என்று மூன்று நாவல்களும் 2019ல் வெளிவந்துள்ளன. இந்த மூன்று நாவல்களும் படைப்பாளிகளின் முதல் நாவல்கள். தொன்மத்தையும், நாட்டார் தெய்வங்களையும், வரலாற்றையும், நவீன கால சிக்கல்களையும் பேசும் நாவல்கள். காயாம்பூ 2021லும் ஹரிலால் 2022லும் வெளிவந்துள்ளன. காயாம்பூ _ குழ...

2025 ன் நாட்கள்

 இந்த ஆண்டு வெள்ளிமலை மரபிலக்கிய வகுப்புடன் தொடங்கியது.  வம்சவிருட்சம் _ எஸ்.எல் பைரப்பா புத்தம் வீடு _ ஹெப்சிபா ஜேசுதாசன் காவியம் _ ஜெயமோகன் மீஸான் கற்கள்_ புனத்தில் குஞ்ஞப்பதுல்லா நாலுகெட்டு _ எம்.டி.வாசுதேவன் நாயர் பாத்துமாவின் ஆடு,மதிலுகள் _ வைக்கம் முகமது பஷீர் [இரண்டாம் முறை] கூளமாதாரி _ பெருமாள் முருகன் முனைவர் வேதாசலத்தின் நூல்கள் நவீன தமிழிக்கிய அறிமுகம் [ மூன்றாவது வாசிப்பு] மாகே கஃபே _அரிசங்கர் பாரீஸ் _ அரிசங்கர் நெருப்பு ஓடு _ தேவி லிங்கம் சூன்யதா _ ரமேஷ் பிரேதன் மௌனி சிறுகதைகள்  இந்த ஆண்டு வாசித்த நூல்களுள் இந்த நூல்கள் முக்கியமானவை. கவிதை வாசிப்பனுபவங்கள்,இரண்டு சிறுகதைகள், எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா ,பெருமாள் முருகன் படைப்புகள் பற்றி கருத்தரங்க நிகழ்விற்கான கட்டுரைகளும்,நாவல் வாசிப்பனுபவங்களும் எழுதியிருக்கிறேன்.  2024 ம் 2025 ம் ஆண்டுகளின் அன்றாடத்தில் வாசிப்பிற்கும் எழுதிற்கும் இது வரை சந்திக்காத இக்கட்டுகளை, சூழல் காரணமான நெருக்கடிகளை உணர்ந்த ஆண்டுகள்.  இந்த ஆண்டில் இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். வரண்டகாலத்தில் உயிர்ப்பிடிக்கும் சப்...