Skip to main content

Posts

சித்திரக்கூடம்

 தமிழினி ஜனவரி இதழில் வெளியான சிறுகதை. தமிழினியில் இது என் முதல் சிறுகதை. நன்றி:தமிழினி                            சித்திரக்கூடம் ஜன்னலைத் திறந்ததும் மார்கழியின் பனி சட்டென்று அறையினுள் பாய்ந்தது. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு சன்னல்பக்கமாக நின்றேன். வயல்வேலைக்கு செல்லும் ஆட்கள் எப்போதா எழுந்து வாசலில் கோலமிட்டு மண்அகல்களை ஏற்றி வாசல் படிஓரமாக வைத்திருந்தார்கள். அவை சிவந்த பொட்டுப்பொட்டான கனல்துண்டங்களாக கருப்புத்  திரையில் கனன்று கொண்டிருந்தன. மாரியம்மன் கோவில் ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலி பரவி  ஊரின் செவிகளைத் தொட்டு எழுப்பத் தொடங்கியிருந்தது. மாடியறை என்பதால் தெளிவாக கணீரென்ற எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் மார்கழிபனி போல காதுகளில்  நுழைந்தது. காற்றாகி கனலாகி கடலாகினாய்… நிலமாகி பயிராகி உணவாகினாய் தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்… அறையின் விளக்கை ஔிரசெய்தேன். இரவு முழுவதும் வரைந்த படங்களால் நிறைந்திருந்தது சிமெண்ட் தரை. ஒன்றுகூட இதற்கு முன் வரைந்த வடிவங்கள் இல்லை. அனைத்தும் விசிறி இழுக்கப்பட்ட கோட...

கவிதை என்றும் பெயர் வைத்துக்கொள்ளலாம்

           சொல்வனம் ஜனவரி இதழில் வெளியான சிறுகவிதைகள். நன்றி சொல்வனம். அழகிய ஒன்றிரண்டு வரிகள் சட்டென மூளையில் உதிக்கின்றன. அவற்றை மறந்துவிட மனம் ஒப்புவதில்லை. அதற்கு கவிதை என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம். அப்படியான வரிகளை எப்பொழுதாவது இதழ்களுக்கு அனுப்ப மனம் ஒத்துக்கொள்கிறது.   கல் தன்மீது கடந்து செல்ல தாகத்துடன் நதிநீரில் கிடக்கும் கூலாங்கல் மலர் எட்டுதிசைகளிலும் மத்தகம் உயர்த்தி  நிற்கும் யானைகளின் காலடிகளில் பத்திரமாய் உறங்குகிறது நெருஞ்சியின் சிறுமுகை. பாலை ஒருசொட்டு நீர்போதும் அந்த ஓவியத்தை நிறம் மாற்ற… உகிர் தன் மீது கால்பதித்து தத்தி நடந்து  முதன்முதலாக பறக்கக் கற்றுக்கொண்ட  பறவை கட்டிக்கொண்ட கூட்டை வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது.

கடல் சிறுகதை தொகுப்பை பற்றிய ஒரு குறிப்பு

 சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் கடல் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியுள்ளார். கடல் பற்றிய முதல் குறிப்பு. நன்றி. https://saravananmanickavasagam.in/ கடல் – கமலதேவி: ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் பா.மேட்டூரில் வசிப்பவர். முதுகலை நுண்ணியிரியல், இளங்கலை கல்வியியல் ஆகிய பட்டப்படிப்புகளைப் படித்தவர். இதுவரை மூன்றுசிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது நான்காவது. நிகழ்காலத்தில் கதை நகர்ந்து கொண்டு போகையில் எந்த எச்சரிக்கையும் இல்லாது, கடந்தகாலம் வந்து கலந்து காலமயக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் கமலதேவியின் கதைகள். Nuclear familyயே நம்மைச்சுற்றிப் பரந்து விரிந்திருக்கும் காலகட்டத்தில், கமலதேவியின் கதைகளில், சித்தப்பா திருமண செய்முறைகளைப் பற்றிப் பேசுகிறார். சித்தி, அக்காவின் குழந்தையை ஆறுமாதத்திற்கு தத்து எடுத்துக் கொள்கிறாள். சுற்றம் சூழ வாய்த்த கதையுலகம் கமலதேவியின் கதைகள். கிராமத்து வாழ்க்கையே பெரும்பாலான கதைகளுக்கான களங்கள். விவசாயத்தை நம்பிய, மண் போகுமுன் உயிரைவிடும் மனிதர்களின் கதைகள். அவர்களது ஆசாபாசங்கள், உறவுச்சிக்கல்கள், அலைக்கழிப்புகள் இவைகளைக் காட்சிப்படுத...

புனைவின் வரை படம்

    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இரு நேர்காணல்களின் தொகுப்பானது புனைவின் வரைபடம் எனும் சிறுநூலாக வெளிவந்துள்ளது.  இந்த நூலில் எழுத்தாளர்களின் நேர்காணல் முக்கியத்துவம் குறித்து எஸ்.ரா குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் மனமும்,வாழ்வும்,அன்றாடமும் எழுத்தாளர் அல்லாதவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டவை. பொதுவாக வைக்கப்படும் கோட்டிற்குள் நிற்க திணறுபவை. எழுத்தாளர்களுடைய படைப்புகளுடன் இணைத்து அவர்களுடைய அந்த படைப்பு சார்ந்து அவர்கள் சொல்வதை எழுதுவதை கேட்பதும் வாசிப்பதும் ஒரு துணை வாசிப்பு போல. சிலருக்கு புத்தகமே போதுமானது. அந்த வகையில் துயில் நாவல் குறித்து எனக்கு இருந்த கேள்விகளுக்கு அல்லது நாவல் பற்றிய என் எண்ணங்களின் பகிர்தலிற்கு இந்த நேர்காணல் உதவியாக இருந்தது. அது அவருக்கும் நல்ல நேர்காணலாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன். புரவி இதழிற்கு நன்றி.

விடாய் :முதல் கதை

                            விடாய் ஊரே பயிர்ப்பொங்கலுக்கு சேவல், கெடாய்கைளை ஊர்சுற்றியிருந்த சாமிகளை எண்ணித் தேர்ந்து கைமாற்றி கொண்டிருந்த வெயிலேரும் பொழுதில் மெய்யன் வயல்வெளி கடந்து மாசிகுன்றடிக்கு வந்திருந்தார். கார்த்திகை வெயில் கழனிக்கு நல்லதில்லன்னு சொரக்கா வாத்தியர் சொன்னதை  துன்முகி கார்த்திகையில ஆமான்னு சொல்லுது காடு மேடெல்லாம். தெற்கே கும்பிட்டு “ஓங்கிட்ட இத்தன சுழச்சிக்கு பிறவு இழுத்தாந்துட்ட போறவழிக்கு தொணைக்கு வாய்யா ”என்று ஓங்கி சொல்லிவிட்டு இடைதுண்டை அவிழ்த்து  கரியதோளில் போட்டு வேட்டியை மடித்துக்கட்டி பெரியண்ணசாமியின் எல்லைக்கடந்து தாயம்மாளின் எல்லைக்குள் நுழைந்தார்.  எங்கால் அவமூட்டில் இடிக்குன்னாலும் இடுப்பில் தூக்கிக்கும் அம்மா. விறகை தலையில வைச்சு திரும்பையில முந்தானைய புடுச்சிக்கிட்டு ஓடிவரனும். அந்த கொடுக்காபுளிமரத்துக்கிட்டதான் கொமரன் பொறந்தான்.  மழைநின்னு போன காலையில் அம்மாவோட வந்தப்ப மழைவில்லுல இருக்கற அத்தன நெறத்துலையும் கருப்பு சிறகுல புள்ளி புள்ளியா போட்ட வண்ணாத்திப்பூச்ச...

கடல் சிறுகதை தொகுப்பின் முன்னுரையும்,என்னுரையும்

 'கடல்' என்னுடைய நான்காவது சிறுகதைத்தொகுப்பு. இந்த ஆண்டு ஜனவரியில் வாசகசாலை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் முன்னுரை எழுதியுள்ளார். அவருக்கு என்  அன்பு.             எளிமையும் ஆழமும் கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொருக் கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. ச...

தொடக்கம்

  2021 ன் தொடக்கத்தில் எனக்கான ஒரு வலைப்பூவை தொடங்கி எழுத வேண்டும் என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. ஜூலை மாதம்தான் எழுதத் துவங்கினேன்.  தாமதம் என்று நினைக்கலாம். என்னைப் பொருத்தவரை இது இயல்பானதே. எதையும் நினைத்ததும் செய்யக்கூடிய இயல்பு எனக்குக் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு செய்கிறேனா என்ற பரிசீலனைக்குப் பிறகே எப்போதும் செய்கிறேன். எழுத்து மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு. இப்படி ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு வார்த்தையையும் பலமுறை யோசித்தே தீர வேண்டிய வாழ்க்கை சூழல் பெண்களுக்குரியது. பெண்ணியம் பேசுவதாக சலித்துக்கொள்ள வேண்டாம். இந்த இயல்புதான் என் எழுத்து செயல்பாட்டின் ஆதாரமாக சொல்வேன். இல்லை என்றால் என் வாழ்க்கை எழுத்தல்லாத பாதையில் எங்கோ சென்று ஒன்றுமில்லாததாக மாறியிருக்கும். இங்கு பெண்களின் சிறு சிறகசைப்பும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அது மிகச்சரியாக அவர்கள் அறியாமலேயே களையப்பட வேண்டியதாக முதலில் தாய்  தந்தையர்களை சமூகமும், குடும்பமும் எச்சரிக்கின்றன. "பொம்ளப்பிள்ளய எதுக்கு பள்ளிக்கூட புத்தகத்து மேல கதை புத்தகங்கள் படிக்கவிடனும். சொன்னப்பேச்சு கேக்காது ...வீட்டு வேலையப்பழ...